தங்களது விநியோக நிலையங்கள் ஊடாக வழங்கப்படும் எரிபொருட்களின் விலைகளை அதிகரிக்குமாறு லங்கா IOC நிறுவனம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
அதன்படி, ஒரு லீட்டர் டீசலின் விலை 25 ரூபாவாலும், ஒரு லீட்டர் பெற்றோலின் விலை 16 ரூபாவாலும் அதிகரிக்குமாறு அந்நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.
உலக சந்தையில் எண்ணெய் விலை அதிகரிப்பின் காரணமாக இலங்கையிலும் விலை அதிகரிப்பை மேற்கொள்ள வேண்டுமென அந்நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.
இலங்கையில் எரிபொருள் விற்பனை நடவடிக்கையில் ஈடுபடுவதால் தமது நிறுவனத்திற்கு நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்படுகிறது.
Tags:
sri lanka news