கொழும்பு துறைமுகத்தில் சிக்கியுள்ள பால்மா தொகையை அகற்றுவதற்கு இறக்குமதியாளர்களுக்கு 1.1 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கிடைக்கப்பெற்றுள்ளது.
அதன்படி, எதிர்வரும் திங்கட்கிழமைக்குள் பால்மா இருப்புக்கள் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, பால்மா உள்ளிட்ட பல அத்தியாவசிய பொருட்களின் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு, சந்தையில் தட்டுப்பாட்டை தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.
இதனுடன் தொடர்பான இறுதி முடிவு அமைச்சரவையால் எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
Tags:
sri lanka news