Friday 22 October 2021

பெண்டோரா விவகாரம் - தெரிவுக் குழுவொன்றை நியமிக்குமாறு கோரிக்கை..!!!

SHARE



பெண்டோரா ஆவணம் மூலம் கடந்த தினம் வௌிப்படுத்தப்பட்ட இந்நாட்டவர்களின் வௌிநாட்டு சொத்துக்கள் தொடர்பில் ஆராய பாராளுமன்ற தெரிவுக் குழுவொன்று நியமிக்கப்பட வேண்டும் என இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றில் இன்று (22) உரையாற்றும் போது அமைச்சர் இதனை தெரிவித்தார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

"பெண்டோரா ஆவணங்கள் தொடர்பில் பாரிய கலந்துரையாடல்கள் இடம்பெறுகின்றன. கிங், நில்வளா தொடர்பில் பேசுகின்றனர். இதில் இருந்து வெளிநாடுகளுக்கு பணம் சென்றுள்ளதாக கூறுகின்றனர். நிரூபமா ராஜபக்ஷவிற்கு அல்லது திரு நடேஷனுக்கு. நான் கூறுவது என்னவென்றால், பாராளுமன்ற தெரிவுக் குழு ஒன்றை நியமியுங்கள். நியமித்து இது தொடர்பில் பேசுவோம். உள்ள யோசனைகள், கருத்துக்களை பெறுவோம். இதற்கு இவ்வாறுதான் பணம் சென்றது என யாராவது கூறுவார்களாயின் அழைத்து வந்து பேசுவோம். குறைந்தளவில் அந்த இடத்திலாவது இதனை தீர்த்துக் கொள்ள முடியும். இது எங்கேயாவது நிறைவு பெற வேண்டும். கூச்சலிட்டவர்களையும் சாட்சியுடன் வர சொல்லுங்கள்."

இதன்போது, தயாசிறி ஜயசேகர முன்வைத்த யோசனைக்கு ஆதரவளிப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளர் லக்ஷ்மன் கிரிஹெல்ல குறிப்பிட்டார்.
SHARE