பெல்மடுல்ல - நோனாகம வீதியின் எல்லேகஹவத்த பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் நபரொருவர் உயிரிழந்துள்ளார் என கஹவத்த காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மொனராகலை - ஹுலங்தாவ பிரதேசத்தை சேர்ந்த 34 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,
ரக்குவானை பிரதேசத்தை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று முன்னால் சென்ற பேருந்தை முந்திச் செல்ல முற்பட்ட போது குறித்த பேருந்தில் மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இதன்போது, படுகாயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
விபத்து தொடர்பில் பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
மேலும் கலென்பிந்துனுவெவ - உபுல்தெணிய வீதியின் கலென்பிந்துனுவெவ நகருக்கு அருகில் இடம்பெற்ற விபத்தொன்றின் போதும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியின் குறுக்காக வெட்டப்பட்டிருந்த குழியொன்றில் விழுந்து விபத்துக்கு உள்ளாகி உள்ளது.
இதன்போது, படுகாயமடைந்த 40 வயதுடைய நபர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Tags:
sri lanka news