தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் பேராசிரியர் முதித விதானபத்திரன தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
அவரின் இராஜினாமாவுக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல, மருந்தகக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் பதவியிலிருந்து விலகவிருந்த மருத்துவர் பிரசன்ன குணசேனவின் பதவிவிலகலை அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷ தடுத்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
மருத்துவர் பிரசன்ன, சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுடன் ஏற்பட்ட மோதல் காரணமாகவே பதவி விலக முடிவுசெய்தார்.
இந்நிலையில் சுகாதார அமைச்சர் கெஹலிய அப்பதவியிலிருந்து பதவி விலகலாம் அல்லது மாற்றப்படலாம் என்ற நிலைமைகூட வரலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
Tags:
sri lanka news