பட்டினிச்சாவை எதிர்கொள்ளும் ஆபத்தில் ஆப்கானிஸ்தான் - எச்சரிக்கும் ஐ.நா..!!!


ஆப்கானிஸ்தான் விடயத்தில் அவசர நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், மில்லியன் கணக்கான மக்கள் குளிர்காலத்தில் பட்டினியைச் எதிர்கொள்ள நேரிடும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவுத் திட்டம் எச்சரித்துள்ளது.

மக்கள் தொகையில் அரைவாசிக்கும் மேற்பட்டவர்களான சுமார் 22 புள்ளி 8 மில்லியன் மக்கள் கடுமையான உணவுப் பாதுகாப்பின்மையை எதிர்கொள்கின்றனர் என ஐ.நா சுட்டிக்காட்டியுள்ளது.

அதேவேளை ஐந்து வயதிற்குட்பட்ட 3.2 மில்லியன் குழந்தைகள் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்படலாம் என்று உலக உணவுத் திட்டம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, ஹசாரா இன மக்கள் அதிகம் வாழும் மேற்கு காபூலில் சிறுவர்கள் 8 பேர் பசி, பட்டினியால் உயிரிழந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post


Put your ad code here