நமீபியா அணி இலங்கை அணிக்கு நிர்ணயித்த வெற்றி இலக்கு..!!!


20 ஓவர் உலக கிண்ண கிரிக்கெட் தொடரின் முதல் சுற்று போட்டிகள் தற்போது இடம்பெற்று வருகின்றன.

அதன் அடிப்படையில் இன்றைய தினம் இலங்கை மற்றும் நமீபியா அணிகளுக்கு இடையிலான போட்டி இடம்பெற்று வருகின்றது.

போட்டியில் நாணய சுழற்சியை வென்ற இலங்கை அணி முதலில் நமீபியா அணியை துடுப்பெடுத்தாடுமாறு பணித்தது.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய நமீபியா அணி 19.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 96 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டுள்ளது.

அவ்வணி சார்பில் வில்லியம்ஸ் அதிகபட்சமாக 29 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.

பந்து வீச்சில் மஹீஸ் தீக்சன மூன்று விக்கெட்டுக்களையும், லஹிரு குமார மற்றும் வனிந்து ஹசரங்க ஆகியோர் தலா இரு விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.

இதற்கமைய, இலங்கை அணிக்கு 97 என்ற வெற்றி இலக்கை நமீபியா அணி நிர்ணயித்துள்ளது.
Previous Post Next Post


Put your ad code here