கோவிட்-19 தொற்றுநோய் காரணமாக திருமணங்கள் உள்ளிட்ட நிகழ்வுகள் மற்றும் பல நடவடிக்கைகளுக்கான கட்டுப்பாடுகளை தளர்த்தி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் புதிய சுகாதார வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளார்.
அதன்படி, உள்புற திருமணங்களில் 100 விருந்தினர்களையும், வெளிப்புற திருமணங்களில் அதிகபட்சமாக 150 விருந்தினர்களையும் அனுமதிக்க என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஒப்புதல் அளித்துள்ளார்.
எனினும் திருமண நிகழ்வுகளில் மதுபாம் வழங்க அனுமதிக்கப்படாது.
இதற்கிடையில், உணவகங்களில், ஒரே நேரத்தில் அதிகபட்சமாக 75 பேர் மட்டுமே உணவருந்த அனுமதிக்கப்படுகிறார்கள். மேலும் வெளிப்புற நிகழ்வுகளில் கலந்துகொள்ளக் கூடியவர்களின் அதிகபட்ச எண்ணிக்கை 100 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேலும், மாநாட்டு மண்டபத்தின் 1/3 இடத்தில் அலுவலகக் கலந்துரையாடல்கள் மற்றும் மாநாடுகளுக்கு அனுமதிக்கப்படுகிறது. அதிகபட்சம் 150 பேரே கலந்துகொள்ள முடியும்.
இதேவேளை, இரவு 11.00 மணி முதல் அதிகாலை 4.00 மணி வரை விதிக்கப்பட்டிருந்த பயணக் கட்டுப்பாடுகள் இன்று நள்ளிரவு முதல் தளர்த்தப்படவுள்ளன