ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்புரிமையிலிருந்து தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் திருமதி டயனா கமகேயை நீக்குமாறு தேர்தல்கள் திணைக்களத்திற்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார இதனைத் தெரிவித்துள்ளார்.
2020 பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்ட அவர் பின்னர் கட்சியின் கொள்கைகளுக்குப் புறம்பாக செயற்பட்டமையால் ஐக்கிய மக்கள் சக்தியினால் ஒழுக்காற்று விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு அதன் இறுதி முடிவுகள் கட்சியின் நிறைவேற்றுக் குழுவில் இன்று சமர்ப்பிக்கப்பட்டது.
ஒழுக்காற்றுக்குழுவின் பரிந்துரைகளை இன்று (07.10.2021)கூடிய நிறைவேற்றுக் குழு ஏகமானதாக ஏற்றுக் கொண்டதன் பிரகாரம் கட்சியின் கொள்கைகளைக்குப் புறம்பாக செயற்பட்டமை நிரூபனமானதால் அவருடைய பாராளுமன்ற உறுப்புரிமையை நீக்கக் கோரி தேர்தல்கள் செயலகத்திற்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Tags:
sri lanka news