நிதியமைச்சு நிவாரணம் அல்லது விலை சலுகை வழங்காவிட்டால் எரிபொருள் விலை அதிகரிக்கப்படும் என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று (13) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.
ஒரு லீற்றர் பெற்றோலின் விலையை 15 ரூபாயினாலும் ஒரு லீற்றர் டீசல் விலையை 25 ரூபாயினாலும் அதிகரிக்க இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் லங்கா ஐஓசி கேட்டுக் கொண்டது என்று கம்மன்பில கூறினார்.
இந்த கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு இறுதி முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை என்றும் எரிசக்தி அமைச்சர் குறிப்பிட்டார்.
Tags:
sri lanka news