நாட்டில் மண்ணெண்ணை அடுப்புகள் அமோகமாக விற்பனை செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அண்மையில் சமையல் எரிவாயுவிற்கான விலைகள் பாரியளவில் அதிகரிக்கப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து மண்ணெண்ணை அடுப்புகள் மற்றும் இலத்திரனியல் அடுப்புகளை அதிகளவானவர்கள் கொள்வனவு செய்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. நேற்றைய தினம் கொழும்பு புறக்கோட்டையில் பெரும் எண்ணிக்கையிலான வாடிக்கையாளர்கள் மண்ணெண்ணை அடுப்புகளை கொள்வனவு செய்துள்ளனர்.
புறக்கோட்டையில் அதிகளவு அடுப்புகள் விற்பனை செய்யப்பட்டதாக புறக்கோட்டை வர்த்தகர் சங்கமொன்று தெரிவித்துள்ளது. மக்கள் அதிகளவில் அடுப்புக்களை கொள்வனவு செய்தனர் என குறித்த சங்கத்தின் தலைவர் சார்ளஸ் பிரதீப் தெரிவித்துள்ளார்.
மண்ணெண்ணை அடுப்பு பற்றி சமூக ஊடகங்களில் வெளியான தகவல்களைத் தொடர்ந்து அதிக எண்ணிக்கையிலானவர்கள் இவ்வாறு கொள்வனவில் ஈடுபட்டதாகத் தெரிவித்துள்ளார். கடந்த இரண்டு நாட்களாகவே இந்த மண்ணெண்ணை அடுப்புக்களின் விற்பனை அதிகரித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். இலத்திரனியல் அடுப்புகளின் விற்பனையும் அதிகரித்துள்ளது.
Tags:
sri lanka news