யாழ்ப்பாணத்திலும் எண்ணெய் வளம்: குடாநாட்டு மத்திய பகுதியில் கண்டுபிடிப்பு..!!!


யாழ்ப்பாணக்‌ குடாநாட்டின்‌ மத்திய பகுதியொன்றில்‌ எண்ணெய்வளங்கள்‌ இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு நிறுவனம்‌ ஒன்றின்‌ மூலம்‌ நடத்தப்பட்ட ஆய்வில்‌ நிலத்தடியில்‌ எண்ணெய்ப்‌ படிமங்கள்‌ இருப்பது ட்ரோன்‌ ஒன்றின்‌ மூலம்‌ கண்டறியப்பட்டுள்ளதாகவும்‌, அதன்‌ ஆராய்ச்சிகள்‌ விரைவில்‌ நடத்தப்‌ படு மனவும்‌ அரச உயர்மட்டத்‌ தகவல்கள்‌ தெரிவித்தன.

குடாநாட்டின்‌ மத்திய பகுதியொன்றில்‌ அடையாளம்‌ காணப்பட்டுள்ள இந்த எண்ணெய்வளத்தை ஆராயும்‌ பணிகளை வெளிநாட்டு நிறுவனம்‌ ஒன்றிடம்‌ ஒப்படைப்பது குறித்தும்‌ ஆலோசிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே மன்னார்‌, பேசாலைப்‌ பகுதியில்‌ எம்‌ - 2 என அழைக்கப்படும்‌ காவிரி பள்ளத்தாக்கில்‌ 2,000 மில்லியன்‌ பீப்பாய்கள்‌ கனிய எண்ணெய்‌ வளம்‌ இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வலுசக்தி அமைச்சர்‌ உதய கம்மன்பில
தெரிவித்திருந்த நிலையில்‌, யாழ்ப்பாணத்திலும்‌ இந்த எண்ணெய்வளம்‌ காணப்படும்‌ தகவல்‌ வெளியாகியுள்ளது.
Previous Post Next Post


Put your ad code here