குடும்பத் தகராறு கோடரி வெட்டில் முடிவு : இருவர் படுகாயம் - யாழில் சம்பவம்..!!!


யாழ்ப்பாணம், இளவாலை உயரப்புலம் பகுதியில் குடும்பத்தகராறு இறுதியில் கோடரி வெட்டிலில் முடிந்துள்ளது.

குறித்த சம்பவத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அப்பகுதியைச் சேர்ந்த 18 மற்றும் 30 வயதுகளையுடைய இளைஞர்களே கோடரி வெட்டுக்கு இலக்காகிய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உறவினர்களுக்கு இடையிலான முரண்பாடு நேற்றைய தினம் இரவு முற்றிய நிலையில் கோடரி வெட்டுத் தாக்குதல் நடைபெற்று உள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளின் அடிப்படையில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில், இளவாலை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Previous Post Next Post


Put your ad code here