Wednesday 27 October 2021

ஆரியகுளத்தில் மத அடையாளங்களுக்கு அனுமதியில்லை - மாநகர சபையில் தீர்மானம்..!!!

SHARE

யாழ் மாநகர சபைக்கு சொந்தமான ஆரியகுளத்தில் எந்த விதமான மத அடையாளங்களையும் அமைக்க அனுமதிக்க முடியாது என யாழ் மாநகர சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

யாழ் மாநகர சபையின் மாதாந்த அமர்வு இன்றையதினம் யாழ் மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தலைமையில் இடம்பெற்றது.

இதன்போதே இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு குறித்த தீர்மானத்தினை நாக விகாரையின் விகாராதிபதிக்கு அனுப்பி வைப்பதாகவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
SHARE