ஒரே பிரசவத்தில் பிறந்த ஆறு குழந்தைகளை பார்த்து நலன் விசாரித்தார் பிரதமரின் பாரியார்..!!!




அண்மையில் ஒரே பிரசவத்தில் ஆறு குழந்தைகளை பிரசவித்த தாயையும் குழந்தைகளையும் பார்வையிட சிரந்தி ராஜபக்ஸ வைத்தியசாலைக்கு சென்றிருந்தார்.

கொழும்பு தனியார் வைத்தியசாலையில் கடந்த 21ஆம் திகதி ஆறு குழந்தைகள் ஒரே பிரசவத்தில் பிறந்திருந்தனர்.

மூன்று ஆண்கள் மற்றும் மூன்று பெண்கள் என இலங்கை வரலாற்றில் முதன்முறையாக ஆறு குழந்தைகள் பிறந்திருந்தனர்.

இதில் குழந்தைகளையும், தாயையும் நேரில் பார்த்து நலம் விசாரித்த சிரந்தி ராஜபக்ஸ, அவர்களுக்கு பரிசில்களையும் வழங்கியுள்ளார்.

மேலும், எதிர்காலத்தில் தேவையான உதவிகளை வழங்குவதாகவும் அவர் உறுதியளித்துள்ளார்.
Previous Post Next Post


Put your ad code here