டிஜிட்டல் தேசிய அடையாள அட்டை 2022ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் அறிமுகப்படுத்தப்படும் என்று அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இன்று காலை Lanka QR Network ஐ அறிமுகப்படுத்தும் நிகழ்வின் போது உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டார்.
உலகின் மிக உயர்ந்த தொழில்நுட்பம் கொண்ட தேசிய அடையாள அட்டை அறிமுகப்படுத்தப்படும் என்று அமைச்சர் நாமல் ராஜபக்ச சுட்டிக்காட்டினார்.
இலங்கை QR நாடுமுழுவதும் வெளிவருவது நாணயத்தாள்கள் பயன்படுத்தாத பொருளாதாரத்தை நோக்கி இலங்கையை துரிதப்படுத்தும் என்று அவர் கூறினார்.
உலகளாவிய மற்றும் டிஜிட்டல் பொருளாதார நிலப்பரப்பில் போட்டித்தன்மையுடன் இருக்க புதிய டிஜிட்டல் பொருளாதார கருவிகளை இலங்கை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.
Lanka QR Network நாட்டின் டிஜிட்டல் பரிவர்த்தனை நிலப்பரப்பில் புரட்சியை ஏற்படுத்தும் என்றும் அவர் கூறினார்.