மூன்றாவது பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை எதிர்வரும் முதலாம் திகதியிலிருந்து ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அத்துடன், இதுவரையில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களுக்கு தடுப்பூசிகளைப் பெற்றுக் கொள்ள தேவையான வசதிகளும் அமைத்துக் கொடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏதேனும் இரண்டு கொவிட் தடுப்பூசிகளை பெற்றுக் கொண்டவர்களுக்கு பைஸர் பூஸ்டர் தடுப்பூசியாக செலுத்தப்பட உள்ளது.
இதற்கமைய, 60 வயதுக்கு மேற்பட்டோர், சிறுநீரக கோளாறு, புற்று நோய் போன்ற பாரதூரமான நோய்களைக் கொண்டுள்ள 30 - 60 வயதுக்கு உட்பட்டோருக்கு மூன்றாவது தடுப்பூசி செலுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Tags:
sri lanka news