அமெரிக்காவின் இடாஹோவில் வணிக வளாகத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் கொல்லப்பட்டனர்.
Boise என்னும் இடத்தில் உள்ள Towne Square வணிக வளாகத்துக்குள் புகுந்த நபர் நடத்திய இந்த துப்பாக்கிச் சூட்டில் காவல்துறை அதிகாரி உட்பட 4 பேர் காயமடைந்தனர்.
துப்பாக்கிச்சூடு நடத்தியவனை பிடிக்க காவல்துறையினர் பதில் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதனையடுத்து அவன் கைது செயப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் அமெரிக்க பல்கலைக்கழக வளாகத்துக்கு அருகே இனந்தெரியாத நபர் மேற்கொண்ட துப்பாக்கிசூட்டில் ஒருவர் உயிரிழந்து எழுவர் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.
Tags:
world news