அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய இணைப்பாளர் வசந்த முதலிகே உள்ளிட்ட 4 பேர், இன்று விசாரணைக்கு அழைக்கப்பட்டபோது நீதிமன்றம் எதிர்வரும் 09ஆம் திகதி வரை மீள விளக்கமறியலில் வைக்கவேண்டும் என உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
கடந்த ஓகஸ்ட் 3ஆம் திகதி நாடாளுமன்ற நுழைவாயில் வீதியில் எதிர்ப்பு நடவடிக்கை இடம்பெற்றது. இதன் போது மஹரகம காவல்துறை பொறுப்பதிகாரிக்கு காயம் ஏற்படுத்தியமை மற்றும் பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவித்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின்கீழ், இவர்கள் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய இணைப்பாளர் வசந்த முதலிகே, ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மாணவர் ஒன்றிய தலைவர் அமில சந்தீப மற்றும் கோசல அங்சமாலி மற்றும் முன்னிலை சோசலிசக் கட்சியின் நிர்வாக செயலாளர் சமீர கொஸ்வத்த ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.
Tags:
sri lanka news