இராகலை காவல்துறை பிரிவுக்குட்பட்ட சென் லெனாட்ஸ் மேல்பிரிவு தோட்டத்தில் இலக்கம் 33 தொடர் குடியிருப்பில் வசித்து வரும் 12 குடும்பங்களை பாதுகாப்பான இடங்களில் குடியமர்த்துமாறு மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
கடந்த சனிக்கிழமை மாலை பெய்த கடும் மழை காரணமாக சென் லெனாட்ஸ் மேல்பிரிவு தோட்டத்தில் காட்டு லயம் என அழைக்கப்படும் இலக்கம் 33 தொடர் குடியிருப்பின் பின்பகுதியில் உள்ள 30 அடி உயரமான மண்மேடு பகுதி சரிந்து வீழ்ந்துள்ளது
இதன் காரணமாக இப்பகுதியில் வசித்த 12 குடும்பங்களை சென் லெனாட்ஸ் தோட்ட முன்பள்ளி கட்டடத்தில் தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டுள்ளனர். இச் சம்பவத்தில் யுவதி ஒருவர் மண்சரிவில் சிக்கியுள்ளார். அவரை காலில் காயத்துடன் அருகில் உள்ளோர் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர் .
Tags:
sri lanka news