கொவிட் காரணமாக பாடசாலைகள் மூடப்பட்டதால் விடுபட்ட பாடங்களை கற்பிப்பதற்காக பாடசாலை நேரத்தை ஒரு மணிநேரம் நீடிக்க அல்லது சனிக்கிழமைகளில் பாடசாலைகளை நடத்த கல்வி அமைச்சு முடிவு செய்துள்ளது.
இது தொடர்பில் பல ஆரம்ப கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு 40 சதவீத மாணவர்களும், இந்த ஆண்டு 60 சதவீத மாணவர்களும் பாடசாலை கல்வியை தவறவிட்டதால், மிக முக்கியமான பாடங்களை கற்று முடிக்கும் திட்டம் தேவை, என அவர் தெரிவித்தார்.
எதிர்காலத்தில் தரம் ஐந்தாம் வகுப்புக்கு மேல் உள்ள வகுப்புக்கள் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில், கடந்த காலங்களில் விடுபட்ட பாடங்களை 100 நாட்களுக்குள் கற்பித்து முடிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.
அதன்படி, அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் விடுபட்ட அனைத்து பாடங்களையும் முடிக்கலாம் என்று நம்புவதாக அவர் மேலும் கூறினார்