
ரக்வான, வலவ்கடே பகுதியில் ரிவேல்வர் மற்றும் அதற்கான 3 தோட்டாக்களுடன் சந்தேக நபர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று (03) ரக்வான பொலிஸாரிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சந்தேக நபர் ஒருவர் முச்சக்கரவண்டியில் பயணித்துக் கொண்டிருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவரிடம் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் மேலும் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் ரக்வான பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags:
sri lanka news