Thursday 21 October 2021

பன்றியின் சிறுநீரகத்தை மனிதனுக்கு வெற்றிகரமாக மாற்றினர் அமெரிக்க அறுவை சிகிச்சை வல்லுநர்கள்..!!!

SHARE



மனிதனுக்கு விலங்குகளின் உறுப்புகளை பொருத்தும் ஆராய்ச்சிகள் பல ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றன. இந்த சோதனைகள் வெற்றி பெற்றால் மனித உறுப்புக்கு தட்டுப்பாடு இருக்காது. சமீபத்தில் பெண் ஒருவருக்கு பன்றியின் சிறுநீரகம் பொருத்தப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இந்த ஆராய்ச்சி வெற்றி அடைந்துள்ளது. அமெரிக்காவின் நியூயார்க் நகரில் NYU மருத்துவ மனையில் இந்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது.

அந்த மருத்துவமனையில் மூளை சாவு அடைந்த பின் ஒருவரை இந்த ஆராய்ச்சிக்காக பயன்படுத்தி இருக்கிறார்கள். மூளை சாவு அடைந்தவரின் உறவினர்களின் அனுமதியோடு இதை செய்து இருக்கிறார்கள்.

அதன் படி, மரபணு மாற்றம் செய்யப்பட்ட பன்றியின் சிறுநீரகத்தை அந்த பெண்ணின் உடலில் பொறுத்தியுள்ளனர். அந்த பன்றியின் சிறுநீரகம் உடலில் எந்த எதிர்வினையும் ஆற்றவில்லை.

மாறாக சீராக வேலை செய்து சரியான அளவில் சிறுநீரகத்தை பிரித்து எடுத்து இருக்கிறது. இது ஆராய்ச்சி உலகத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி.
SHARE