கொழும்பிலுள்ள சீன தூதரகம் வெளியிட்ட அவசர அறிவிப்பு..!!!


சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கரிம உர மாதிரிகளில் ஆபத்தை விளைவிக்கும் பக்டீரியாக்கள் இருந்தமையை அடுத்து கரிம உரத்தை கொண்டு வந்த கப்பல் திருப்பி அனுப்பப்பட்டது.

இந்தநிலையில் இது தொடர்பான சர்ச்சைக்கு பதிலளிக்கும் வகையில் கொழும்பில் உள்ள சீன தூதரகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்த சர்ச்சை தொடர்பான உண்மைகள் மற்றும் ஒப்பந்தத்தின் சிக்கலை உடனடியாக தீர்க்கும் நோக்கத்துடன், சீன நிறுவனம் மற்றும் இலங்கை அதிகாரிகள் இருவரும் ஒத்துழைக்க வேண்டும் என தூதரகம் குறிப்பிட்டுள்ளது.

சீன -இலங்கை ஒத்துழைப்பின் மூலமான பரஸ்பர உரையாடலின் மூலம் இதில் காணப்படும் வேறுபாடுகளை நிவர்த்தி செய்யுங்கள் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கரிம உர சர்ச்சையால் இரண்டு நாடுகளுக்குமிடையே உறவு பாதிக்கப்படும் என சீன தூதரகம் விவசாய அமைச்சருக்கு கடிதம் அனுப்பியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post


Put your ad code here