
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனை ஒக்டோபர் 08 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
அவரை இன்று கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதை அடுத்து, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஈஸ்டர் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர்களுடன் தொடர்புகளை பேணியதாக குற்றஞ்சாட்டப்பட்டு, கடந்த ஏப்ரல் 24 ஆம் திகதி நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் கைது செய்யப்பட்டிருந்தார்.
Tags:
sri lanka news