Saturday 16 October 2021

புதிய வைரஸ் எப்போது வேண்டுமானாலும் நாட்டிற்குள் நுழையும்..!!!

SHARE

கொரோனா வைரஸின் புதிய திரிபுகள் நாட்டிற்குள் வரும் சாத்தியம் எப்போதும் உள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

நாடு தற்போது சுற்றுலாப் பயணிகளுக்காக திறக்கப்பட்டுள்ளது. துறைமுகங்கள் மீண்டும் செயற்பட ஆரம்பித்துள்ளன. இதனால், புதிய திரிபுகள் நாட்டிற்குள் வரக் கூடிய ஆபத்து இருக்கின்றது. இதனால் ஏற்படும் கணிக்க முடியாத ஆபத்து இருக்கின்றது.

இதனால், மக்கள் முழுமையான தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டாலும் சுகாதார வழிக்காட்டல்களை கண்டிப்பாக பின்பற்ற வேண்டியது அவசியம்.

நாம் இந்த தொற்று நோயில் இருந்து விடுப்பட்டு, அது சம்பந்தமான பிரச்சினைக்கு தீர்வுகாண வேண்டுமாயின் அனைவரும் சுகாதார வழிக்காட்டல்களை பின்பற்ற வேண்டும்.

அதேவேளை நாட்டின் மொத்த சனத்தொகையில் குறைந்தது 67 வீதமானவர்கள் ஒரு தடுப்பூசியை பெற்றுக்கொண்டுள்ளனர். 58 வீதமானோர் இரண்டு தடுப்பூசிகளை பெற்றுக்கொண்டுள்ளனர்.

நாம் திருப்பதிகரமான நிலையை அடைய வேண்டுமபயின் மொத்த சனத்தொகையில் 70 முதல் 80 வீதமானோருக்கு தடுப்பு வழங்கப்பட்டிருக்க வேண்டும் எனவும் குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.
SHARE