நியூஸிலாந்தில் மேலும் சில இடங்களில் முடக்கம்..!!!


நியூஸிலாந்தில், ஒக்லாந்து நகரிலிருந்து மற்ற பகுதிகளுக்கு டெல்டா வகைக் கொரோனா தொற்று பரவியுள்ளது.

ஓகஸ்ட் மாதத்தின் நடுப்பகுதியிலிருந்து முடக்கப்பட்ட ஒக்லாந்தில் மேலும் 32 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. வைகாட்டோ பகுதியில் இருவருக்கு தொற்றுச் சம்பவம் பதிவாகியுள்ளது.

அதன் காரணமாக, நியூஸிலாந்துப் பிரதமர் ஜசிண்டா ஆர்டன், வைக்காட்டோவில் 5 நாள் முடக்கநிலையை அறிவித்துள்ளார்.

ஒக்லாந்து, தொடர்ந்து முடக்கப்படுமா என்பது குறித்து அரசாங்கம் நாளை திங்கட்கிழமை முடிவு செய்யும் என்றும் ஆர்டன் குறிப்பிட்டார். அங்கு இதுவரை, 1,328 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்ளத் தகுதி பெற்றவர்களில் 90 வீதத்தினருக்கு முழுமையாகத் தடுப்பூசி போடப்பட்டால், நியூஸிலாந்தில் நடப்பில் உள்ள கடுமையான முடக்கம் தளர்த்தப்படலாம் என்பதாக ஆர்டன் குறிப்பிட்டார்.

தற்போது, அங்கு, 46 வீதமானவர்கள் மட்டுமே முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டடுள்ளனர்.
Previous Post Next Post


Put your ad code here