நெஞ்சுவலியென சிகிச்சைக்காக சென்ற பெண் புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் மரணம்..!!!


முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு ஆதார மருத்துவமனைக்கு இன்று(01) காலை நெஞ்சு வலியென சிகிச்சைக்காக சென்ற வயோதிப பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பில் தெரியவருகையில். இடைக்கட்டு வள்ளிபுனம் பகுதியினை சேர்ந்த கணேஸ் விஜயா 52 அகவையுடைய வயோதிப பெண் வீட்டில் இருந்த வேளை நெஞ்சுவலி ஏற்பட்டுள்ள நிலையில் புதுக்குடியிருப்பு ஆதார மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார்கள்.

அங்கு குறித்த வயோதிபருக்கு முதற்கட்ட சிகிச்சை அளிக்கப்பட்ட போதும் அவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் உடலம் புதுக்குடியிருப்பு ஆதார மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதுடன் பி.சி.ஆர் பரிசோதனை மற்றும் பிரேத பரிசோதனைக்காக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனை கொண்டு செல்லப்படவுள்ளது மரண விசாரணைகளின் பின்னர் உடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.
Previous Post Next Post


Put your ad code here