Friday 1 October 2021

உலகில் 23 பறவை, மீன் இனங்கள் முற்றாக அழிவு..!!!

SHARE

பறவைகள், மீன்கள் ஆகியவற்றில் 23 வகையான உயிரினங்கள் முற்றிலும் அழிந்து விட்டதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

இதுகுறித்து அமெரிக்க மீன்கள் மற்றும் வன உயிரின அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில், 11 வகையான பறவைகள், ஒரு வௌவால் இனம், இரு மீன்கள் வகை, 8 வகையான சிப்பி இனம் ஆகியவை முற்றிலும் அழிந்து விட்டதாக தெரிவித்துள்ளது.

இந்நிலையில், அமெரிக்காவின் மிகப் பெரிய மரங்கொத்தியான தந்தம் போன்று கடினமான வாயமைப்பு கொண்ட அந்தப் பறவை 1967ஆம் ஆண்டுக்குப் பின் காணப்படவில்லை.

இதேபோல் பேச்மென்ஸ் வாப்ளர் என்ற பாடும் பறவையும் 1967ஆம் ஆண்டுக்குப் பின் பார்க்கப்படவில்லை. இது மனிதர்களால் ஏற்பட்ட மாபெரும் அழிவு என்று கூறப்படுகிறது.

ஹவாயியைச் சேர்ந்த எட்டுப் பறவை இனங்களும் பசிபிக் தீவான குவாமில் இருந்த சிறிய மரியானா பழம் தின்னும் வௌவால் இனம் ஒன்றும் முற்றாக அழிவடைந்த பட்டியலில் உள்ளன.

“இந்த உயிரினங்கள் ஒவ்வொன்று பற்றியும் தற்போது கிடைக்கக்கூடிய சிறந்த மீளாய்வுகளைப் பயன்படுத்தியே இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது” என்று அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
SHARE