அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானியின் இலங்கை விஜயத்தின் போது, அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஸ மற்றும், பிரதமர் மகிந்த ராஜபக்ஸவை சந்தித்திருந்தார்.
இது தொடர்பில், “இலங்கை அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஸ மற்றும், பிரதமர் மகிந்த ராஜபக்ஸவை சந்தித்தமை பாக்கியம்” என கௌதம் அதானி தனது டுவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
மேலும், கொழும்பு துறைமுகத்தின் மேற்கு கொள்கலன் முனையத்தை அபிவிருத்தி செய்வதற்கும் இயக்குவதற்கும் அரசாங்கத்திற்கு சொந்தமான இலங்கை துறைமுக அதிகாரசபையுடன் (SLPA) அவரது நிறுவனம் ஒப்பந்தம் செய்ததையும் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையிலான வரலாற்று ரீதியான உறவையும் இதன்போது கௌதம் அதானி நினைவூட்டியுள்ளார்.
Tags:
sri lanka news