மாலிபட நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மேற்கொள்ளப்படும் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை மறுதினம் (17) 8 மணித்தியால நீர் வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
அதன்படி, நீர் வெட்டு அமுல்ப்படுத்தப்படும் பிரதேசங்கள் பின்வருமாறு...
மாத்தறை நீர் வழங்கல் திட்டம் - கெகனதூர, வேரஹேன
தேவிநுவர நீர் வழங்கல் திட்டம் - தல்பாவில, கெகனதூர, கந்தர பிரதேசம்
கோட்டேகொட நீர் வழங்கல் திட்டம் - கோட்டேகொட, ரத்மலே, ஹுன்னதெனிய, பாதேகம
திக்வெல்ல நீர் வழங்கல் திட்டம் - திக்வெல்ல, குடாவெல்ல
அதன்படி, மேல் குறிப்பிட்ட பிரதேசங்களில் 17 ஆம் திகதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
Tags:
sri lanka news