கடவத்தை, கிரில்லவல பிரதேசத்தில் அதிக மது போதையில் இருந்த நபர் ஒருவர் செலுத்திய ஜீப் வாகனம் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்கு உள்ளாகும் காட்சி சிசிரிவியில் பதிவாகி உள்ளது.
குறித்த நபர் கடவத்தை - கண்டி வீதியில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றிற்கு முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனது ஜீப் வாகனத்தை வீதியின் குறுக்காக தாறுமாறாக ஓட்டிய நிலையில் ஹோட்டலுக்கு முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஜீப் வாகனத்தில் மோதும் காட்சி அதில் பதிவாகியுள்ளது.
பின்னர், ஜீப் வாகனத்தில் இருந்து இறங்கிய குறித்த நபர், நடக்க முடியாது அதிக மது போதையில் இருப்பதை காணக்கூடியதாக உள்ளது.
குடிபோதையில் இருந்த சாரதி கடவத்தை பொலிஸாரினால் அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
Tags:
sri lanka news