O/L பரீட்சைக்கான விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படும் இறுதித் திகதி குறித்த அறிவிப்பு..!!!




க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளை மீளாய்வு செய்வதற்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் இறுதித் திகதி எதிர்வரும் 25 ஆம் திகதியுடன் நிறைவடையும் என பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கான விண்ணப்பங்களை பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் ஊடாகவோ அல்லது கையடக்கத் தொலைபேசி செயலி (app) ஊடாகவோ சமர்ப்பிக்க முடியும்.

தற்போதைய கொவிட் சூழ்நிலை காரணமாக, இந்த ஆண்டு பாடசாலை விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்களுக்கு அதிபரின் பரிந்துரை அல்லது கையொப்பம் அவசியமில்லை என்று பரீட்சைத் திணைக்களத்தினால் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Previous Post Next Post


Put your ad code here