மெக்சிகோவில் பஸ் வண்டி வீட்டில் மோதி 19 பேர் பலி..!!!


மெக்சிகோ சிட்டியில் நேர்ந்த பஸ் விபத்தில் குறைந்தது 19 பேர் பலியானதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பயணிகளுக்கான அந்த பஸ் நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தபோது, ஒரு வீட்டின் மீது மோதியது. அதில் மேலும் 20 பேர் காயமுற்றனர்.

மெக்சிகோவில் உள்ள சமயத் தளம் ஒன்றை நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோது, அந்தப் பஸ்ஸின் நிறுத்தும் விசை செயல் இழந்ததாக மெக்சிகோ ஊடக அறிக்கைகள் குறிப்பிட்டன.

இருப்பினும், அதிகாரிகள் விபத்துக்கான மற்ற காரணங்களை வெளியிடவில்லை.

விபத்து நேர்ந்தவுடன், அந்த இடத்துக்கு 10 அவசர மருத்துவ வாகனங்கள் அனுப்பப்பட்டதாக அந்த வட்டாரத்தின் செஞ்சிலுவைச் சங்கம் கூறியது.

சிலர் வான்வழியாக மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

மெக்சியோவில் அதிக உயிர்ச்சேதங்கள் கொண்ட வீதி விபத்துகள் இடம்பெறுவது வழக்கமானதாக மாறியுள்ளது. கடந்த செப்டெம்பரில் வடக்கு மாநிலமான சொனோராவில் பஸ் மற்றும் டிரக் வண்டிகள் மோதி 16 பேர் கொல்லப்பட்டு மேலும் 22 பேர் காயமடைந்தனர்.

கடந்த ஏப்ரலில் சொனோராவில் சுரங்கத் தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற இரு பஸ்கள் விபத்துக்குள்ளானதில் 16 பேர் கொல்லப்பட்டனர்.
Previous Post Next Post


Put your ad code here