அவுஸ்திரேலியாவில் ஆடு ஒன்று 21,000 அவுஸ்திரேலிய டொலர்களுக்கு (சுமார் 30 இலட்சம் ரூபா) விற்பனையாகியுள்ளது.
மாராகேஷ் எனும் இந்த ஆடு கடந்த புதன்கிழமை, நியூ சௌத் வேல்ஸ் மாநிலத்தின் கோபர் நகரில் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டது.
அண்ட்ரூ மோஸ்லி என்பவரை இந்த ஆட்டை வாங்கினார். அவுஸ்திரேலியாவில் மிக அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்ட ஆடு இதுவாகும். இதற்கு முன்னர் கடந்த மாதம் 12,000 டொலர்களுக்கு ஆடு ஒன்று விற்பனையாகியமையே சாதனையாக இருந்தது.
Tags:
world news