பெருவில் பாரிய பூகம்பம்: 400 ஆண்டு பழைமையான தேவாலய கோபுரம் இடிந்தது..!!!


பெரு நாட்டின் வடக்கு பகுதியில் இன்று (29) பாரிய பூகம்பம் ஏற்பட்டுள்ளது.

கடலோர நகரமான பராங்காவில் இருந்து 42 கிமீ வடக்கு வடமேற்கில் பூகம்பம் மையம் கொண்டிருந்தது. இந்த பாரிய பூகம்பம், ரிக்டர் அளவுகோலில் 7.4 ஆக பதிவாகியிருந்தது. பூகம்பம் காரணமாக கட்டிடங்கள் குலுங்கியுள்ளன. சில கட்டிடங்கள் இடிந்து வீழ்ந்துள்ளன.

பெரு நாட்டில் பயங்கர நிலநடுக்கம்- பழமையான தேவாலய கோபுரம் இடிந்தது

வடக்கு பெருவில் பாதுகாக்கப்பட்ட 400 ஆண்டு பழைமையான தேவாலயத்தில் 14 மீட்டர் உயரம் கொண்ட கோபுரம் இடிந்து வீழ்ந்துள்ளது. ஈக்வடாரில் உள்ள ஒரு தேவாலயம் சேதமடைந்துள்ளது. கொலம்பியாவிலும் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது.

இன்று ஏற்பட்ட பூகம்பம் மிகவும் சக்திவாய்ந்ததாக இருந்தபோதிலும், மிகவும் ஆழமான பகுதியில், அதாவது 112 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதால், பெரிய அளவில் பாதிப்புகளை ஏற்படுத்தவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

பூகம்பம் அதிகம் ஏற்படும் பசிபிக் நெருப்பு வளைய பகுதியில் பெரு நாடு உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post


Put your ad code here