ஜப்பானுக்கு வெளிநாட்டவர்கள் வருவதற்கு அனைவருக்கும் தடை விதிக்கவுள்ளதாக ஜப்பானிய அரசு இன்று தெரிவித்துள்ளது.
அதிக தொற்றும் தன்மை கொண்ட ஒமிக்ரோன் (Omicron) வகை கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக இத்தீர்மானம் மேறகொள்ளப்பட்டுள்ளது.
இதேவேளை, இஸ்ரேல், மொரோக்கோ ஆகிய நாடுகளும் வெளிநாட்டவர்களுக்கு பயணத்தடைகளை அறிவித்துள்ளன.
இஸ்ரேல் நேற்று ஞாயிற்றுக்கிழமை முதல் வெளிநாட்டவர்கள் இஸ்ரேலுக்கு வருவதற்குத் தடை விதித்துள்ளது.
மொரோக்கோவுக்கு வரும் அனைத்து விமானங்களுக்கும் இன்று முதல் 2 வாரங்களுக்குத் தடுக்கப்படும் என மொரோக்கோ அரசாங்கம் தெரிவித்துள்ளது.
மொரோக்கோவுக்கு வரும் அனைத்து விமானங்களுக்கும் இன்று முதல் 2 வாரங்களுக்குத் தடுக்கப்படும் என மொரோக்கோ அரசாங்கம் தெரிவித்துள்ளது.
ஒமிக்ரோன் வகை கொரோனா வைரஸ் முதலில் தென் ஆபிரிக்காவில் கண்டறியப்பட்டது. அவுஸ்திரேலியா, பெல்ஜியம், பொட்ஸ்வானா, பிரிட்டன், கனடா, டென்மார்க், பிரான்ஸ், ஜேர்மனி, ஹொங்கொங், இஸ்ரேல், இத்தாலி, நெதர்லாந்து, ஸ்கொட்லாந்து ஆகிய நாடுகளிலும் பின்னர் இவ்வைரஸ் கண்டறியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Tags:
world news