5 மாவட்டங்களில் கொவிட் கொத்தணி அபாயம்..!!!


5 மாவட்டங்களில் மீண்டும் கொவிட் கொத்தணி உருவாகும் அபாயம் காணப்படுவதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

எனவே, இந்த வார இறுதியில் சுற்றுலாப் பயணங்கள் உள்ளிட்ட அத்தியாவசியமற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு அவர் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

அத்துடன், அனுராதபுரம், அம்பாறை, அம்பாந்தோட்டை, மாத்தறை மற்றும் காலி மாவட்டங்களில் கொவிட் கொத்தணிகள் உருவாகும் விதத்தை நாங்கள் அவதானித்துள்ளோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

வைபவங்கள், திருமண நிகழ்வுகள், சமய நிகழ்வுகள் போன்றவற்றில் பொது மக்கள் ஒன்றுகூடுவதாக கூறப்படுகிறது.

இத்தகைய சூழ்நிலையில் கொவிட் கொத்தணிகள் உருவாவதைத் தடுக்க முடியாது. அதனால், பொது இடங்களில் மக்கள் ஒன்றுகூடுவதை முடிந்தவரை தவிர்க்குமாறும் அவர் மேலும் கேட்டுககொண்டுள்ளார்
Previous Post Next Post


Put your ad code here