நடிகர் கமல்ஹாசன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் அவர் தொகுத்து வழங்கி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் தொடர்ந்து பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டது. இவருக்கு பதில் யார் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க போகிறார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது.
ஸ்ருதிஹாசன்,விஜய் சேதுபதி, சிலம்பரசன் என கூறப்பட்டு வந்த நிலையில் இறுதியாக ரம்யா கிருஷ்ணன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார் என அதிகாரபூர்வமாக அதற்கான முன்னோட்டத்தை நிகழ்ச்சி நடத்துவோர் வெளியிட்டுள்ளனர். அதில் மருத்துவமனையிலிருந்து கமல்ஹாசன் பேசுகிறார். ‛‛தொய்வில்லாமல் இந்த நிகழ்ச்சியை நீங்கள் கண்டு கழிக்க ஒரு தோழி எனக்கு உதவி செய்கிறேன் என்று கூறியிருக்கிறார்'' என கமல் கூறும்போது ரம்யா கிருஷ்ணன் அரங்கிற்குள் நுழைகிறார்.
பொதுவாக சனிக்கிழமைக்கான முதல் முன்னோட்ட வீடியோ மதியம் தான் வெளியிடுவார். ஆனால் இன்று 5 மணியளவில் தான் முதல் முன்னோட்டம் வெளியானது. கமல்ஹாசன் இடத்தில் ரம்யா கிருஷ்ணன் பிக்பாஸ் நிகழ்ச்சியை எந்தளவுக்கு சுவாரஸ்யமாக கொண்டு செல்ல போகிறார் என்பதை பொருத்திருந்து பார்க்கலாம்.
ஸ்ருதிஹாசன், விஜய்சேதுபதி, சிலம்பரசன் பரிசீலனையில் இருந்தும் ரம்யாகிருஷ்ணன் உள்ளே வந்தது எப்படி? என்று கேள்வி எழுகிறது. ஸ்ருதிஹாசனுக்கு தமிழே தகராறு, விஜய்சேதுபதி ஏற்கனவே குக் வித் கோமாளி, ஏகப்பட்ட சர்ச்சைகளில் அவரது பெயர் அடிபடுகிறது, சிலம்பரசன் இதுபோன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது சிரமம் என்பதால் தவிர்க்கப்பட்டிருக்கின்றனர். படையப்பா நீலாம்பரி ரம்யா கிருஷ்ணனுக்கு இன்றும் கிராமங்களில் க்ரஷ் இருக்கிறது. சொன்னதை கேட்டு எழுதிக் கொடுப்பதை பேசி நிகழ்ச்சியை நடத்துவார். அதுதான் இப்போதைக்கு பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தேவை என்பதால் ரம்யா கிருஷ்ணன் பிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்தும் பொறுப்புக்கு தேர்வு செய்யப்பட்டிருக்கிறார் என்கிறது விஜய் தொலைக்காட்சி வட்டாரம்.
Tags:
cinema news