சுகாதாரத்துறை தொழில் வல்லுனர்கள் சம்மேளனத்தின் சுகாதார சேவையாளர்கள் இன்று (23) காலை முதல் இரண்டு நாட்கள் பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்துள்ளனர்.
அதற்கமைய, முதல் கொவிட் தொற்றாளர்களுக்கு PCR மற்றும் ரெபிட் என்டிஜன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படமாட்டாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேதனம் மற்றும் கொடுப்பனவு உள்ளிட்ட சில பிரச்சினைகளை முன்வைத்து இன்று காலை 7 மணி முதல் இந்தப் பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படுகிறது.
தாதியர், இடைநிலை, நிறைவுகாண் சுகாதார மற்றும் பொது சுகாதார பரிசோதகர்கள் உள்ளிட்ட 16 தொழிற்சங்கங்கள் இவ்வாறு பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளனர்.