Tuesday 30 November 2021

கட்டுநாயக்க விமான நிலையத்தில் திடீரென ஏற்பட்ட மாற்றம்..!!!

SHARE

தற்போது உலகத்தை அச்சுறுத்திக் கொண்டிரு்கிறது ஒமிக்ரோன் எனும் கொரோனாவின் புதிய பிறழ்வான தொற்று.

தென்னாபிரிக்காவில் அடையாளம் காணப்பட்ட இந்த ஒமிக்ரோன் பிறழ்வு இலங்கைக்குள்ளும் ஊடுவலாம் எனவும் இதனை தடுக்க கடுமையான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அந்த வகையில் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கடுமையான பாதுகாப்பு செயற்திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பிரதி சுகாதாரப் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.

ஒமிக்ரோன் புதிய மாறுபாடு ஏற்கனவே உலகம் முழுவதும் பரவிவிட்டதாகவும், சரியான சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவதன் மூலம் எங்களை பாதுகாத்துக் கொள்ள முடியும் என்றும் அவர் கூறினார்.

தற்போதைய நிலையில் நாட்டை மூடுவதால் எந்த பயனும் ஏற்படாது. புதிய தொற்று நாட்டிற்குள் நுழைவதைத் தடுக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ஆனால், சுகாதார ஆலோசனைகளை முறையாக பின்பற்றுவது மட்டுமே தற்போதைய நிலைமையில் எடுக்க வேண்டிய பிரதான நடவடிக்கை என்றும் அவர் குறிப்பிட்டார்.

தற்போது தடுப்பூசி போடப்பட்டுள்ளது. என்ன செய்தாலும் மக்கள் தற்போதைய நிலைமையை சரிவர அடையாளம் கண்டு அதன்படி வாழாவிட்டால் நாட்டில் நோய் பரவுவதை தடுக்க முடியாது. தேவையில்லாமல் பயணம் செய்யாமல், அதை தவிர்ப்பது முகக் கவசம் பயன்படுத்துவது போன்ற விடயங்களைச் செய்வது மிகவும் அவசியம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
SHARE