எரிவாயு சிலிண்டர் வெடிப்பு தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் தொடர்பில் துறைசார் வல்லுநர்களின் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது என்று மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சாந்த வல்பொல தெரிவித்துள்ளார்.
இந்த அறிக்கை நாளை பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபைக்கு சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
நாடுமுழுவதும் 12 பகுதிகளில் இருந்து எடுக்கப்பட்ட 12 எரிவாயு மாதிரிகள் பற்றிய அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையில் 12 மாதிரிகள் மற்றும் வாயு கலவை தொடர்பான வல்லுநர்களின் கருத்துக்கள் அடங்கியுள்ளதாக மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சாந்த வல்பொல தெரிவித்துள்ளார்
Tags:
sri lanka news