மன்னார், சாந்திரபுர கடற்கரை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விஷேட சோதனையின் போது சட்ட விரோத வெடிபொருட்களுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது வோட்டர் ஜெல் (Water Gel) எனும் வெடிபொருட்கள் 7,990 கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
998 கிலோ 750 கிராம் நிறையுடைய வெடிபொருட்களே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
54 மற்றும் 57 வயதுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
Tags:
sri lanka news