கொழும்பில் அமைந்துள்ள விளையாட்டு அமைச்சுக்கு அருகில் உள்ள தனியார் உணவகம் ஒன்றில் பாரிய தீ விபத்து ஏற்பட்டமைக்கான காரணம் இனங்காணப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் உணவகத்தில் ஏற்பட்ட எரிவாயுக் கசிவினால் இவ்வாறு தீ விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இன்று (20) அதிகாலை 5.30 மணி அளவில் இந்த தீ விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த தீ விபத்தினால் அப்பகுதியில் அமைந்துள்ள உணவக கட்டிடத்திற்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது
Tags:
sri lanka news