இருவருக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் நீண்டதில் ஏற்பட்ட தகராறில் ஒருவர் கத்தியால் குத்தி கொல்லப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று (26) கணேவத்த தம்பகல்ல பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவர் கல்கமுவ, இஹல பழுகுமுதேவ பகுதியைச் சேர்ந்த பிரியங்கர சாலிய குமார (46) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
கார் மெக்கேனிக்கான மரணமானவர் நேற்று (26) பிற்பகல் கணேவத்தை தம்பகல்ல பிரதேசத்தில் உள்ள தனது உதவியாளர் ஒருவரின் வீட்டிற்கு சென்றுள்ளார்.
இதன்போது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு அந்த நபர் உதவியாளரால் குத்திக் கொல்லப்பட்டார்.
கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
Tags:
sri lanka news