சீரற்ற காலநிலை காரணமாக கண்டி, அங்கும்புர பிரதேசத்தில் நேற்று (26) இரவு வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளது.
இந்த விபத்தில் வீட்டில் இருந்த 55 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இதன்போது வீட்டில் இருந்த அவரது 9 வயது மகள் விபத்தில் படுகாயமடைந்து கண்டி பொது வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இதேவேளை, சீரற்ற காலநிலை காரணமாக பதுளை கந்தேகெதர கல்கொடுவ கிராமத்தின் நுழைவாயிலில் இரண்டு இடங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் சில நாட்களாக ஏற்பட்ட மண்சரிவுகளால் மூன்று வீடுகள் சேதமடைந்துள்ளதாக எமது செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
Tags:
sri lanka news