பாராளுமன்ற உறுப்பினர் றிசாத் பதியுதீனின் சகோதரரான ரியாஜ் பதியுதீன் கடுமையான நிபந்தனைகளின் கீழ் உயர் நீதிமன்றத்தினால் விடுவிக்கப்பட்டுள்ளார்.
ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பாக ஏப்ரல் மாதம் கைதான ரியாஜ் பதியுதீனுக்கு, பிணை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு உயர் நீதிமன்றில் இன்று (15) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போதே அவரைக் கடுமையான நிபந்தனைகளுடன் விடுவிக்க உயர் நீதிமன்றம் தீர்மானித்தது.
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் ரியாஜ் பதியுதீன் கைது செய்யப்பட்டு, பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் தம்மைக் கைது செய்திருப்பது சட்டவிரோதமானது என அறிவிக்கக் கோரி ரியாஸ் பதியுதீன் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனுவை விசாரிப்பதற்கு உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
நீதியரசர்களான விஜித் மலல்கொட, முர்து பெர்னாண்டோ மற்றும் காமினி அமரசேகர ஆகிய மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
Tags:
sri lanka news