கிராமத்திற்குள் வாள்கள் கோடரியுடன் சுற்றித்திரிந்த கும்பல்..!!!


மட்டக்களப்பு மாவட்டத்தின் சந்திவெளி காவல்துறைப் பிரிவில் வாள் மற்றும் கை கோடரி என்பற்றுடன் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக சந்திவெளி காவல் நிலைய பொறுப்பதிகாரி எம்.சுதர்சன் தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

சந்திவெளி காவல்துறை பிரிவில் சித்தாண்டி விநாயகர் கிராமத்தில் வாள்களுடன் ஒரு குழு சுற்றித்திரிவதாக காவல்துறைக்கு கிடைத்துள்ளது.

அதனையடுத்து பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர் மேற்கொண்ட நடவடிக்கையின் பயனாக ஆறு வாள் மற்றும் கை கோடரி ஒன்று என்பற்றுடன் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் காவல் நிலைய பொறுப்பதிகாரி எம்.சுதர்சன் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் தொடர்பாக விசாரனைகள் இடம் பெற்று வருவதுடன் இவர்களை ஏறாவூர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படுவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
Previous Post Next Post


Put your ad code here