பேருந்தில் கஞ்சா கடத்தியவருக்கு நேர்ந்த கதி..!!!




முல்லைத்தீவிலிருந்து திருகோணமலைக்கு ஒரு கிலோ 800 கிராம் கேரளா கஞ்சா பொதியை கொண்டு சென்ற நபர் ஒருவரை இம்மாதம் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதிவான் இன்று (15) உத்தரவிட்டார்.

புதுமாத்தளன், முள்ளிவாய்க்கால், முல்லைத்தீவு பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் முல்லைத்தீவு பகுதியிலிருந்து திருகோணமலைக்கு அனுமதிப்பத்திரமின்றி ஒரு கிலோவும் 800 மில்லி கிராம் கஞ்சா பொதியை பயணிகள் பஸ்ஸில் கொண்டு செல்வதாக புல்மோட்டை போதைப் பொருள் குற்றத்தடுப்பு பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரை பொலிஸார் திருகோணமலை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் இன்றைய தினம் (15)ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.
Previous Post Next Post


Put your ad code here