யாழ். கோட்டைக்கு அருகில் உள்ள தேவாலயம் மீது தாக்குதல் - ஒருவர் கைது..!!!


யாழ்ப்பாணம் கோட்டைக்கு அண்மையில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்திற்கு இன்று அதிகாலை 3:30 மணியளவில் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.

பொலிஸ் நிலையத்திற்கு அண்மையில் உள்ள குறித்த தேவாலயத்தின் மீது தாக்குதல் நடாத்தப்பட்டதையடுத்து அவ்விடத்திற்கு விரைந்த பொலிஸார் விசாரணை நடத்தியதோடு குறித்த தாக்குதலை நடாத்திய கொட்டடி பகுதியைச் சேர்ந்த ஒருவரை கைது செய்துள்ளார்கள்.

கைது செய்யப்பட்டவர் மது போதையில் இருந்ததாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.

தாக்குதலின் பிண்ணனி தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாண பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post


Put your ad code here